• 6 years ago
த்திய அமைச்சர் நிதின் கட்கரி
மீண்டும் பா ஜனதா தலைமையை
ஓப்பனாக விமர்சித்து இருக்கிறார்.

“வெற்றிக்கு மட்டுமல்ல;
தோல்விக்கும் பொறுப்பு ஏற்பவன்தான்
உண்மையான தலைவன்”
என்று சில நாட்களுக்கு முன் கட்கரி சொன்னார்.

”மோடிக்கு பதிலாக கட்கரியை
பிரதமர் வேட்பாளராக அறிவித்தால்தான்
பா ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்”
என்று ஆர் எஸ் எஸ் தலைவருக்கு
மகாராஷ்ட்ர விவசாயிகள் சங்க தலைவர்
கடிதம் எழுதியுள்ள நிலையில்
கட்கரி இவ்வாறு பேசியது பா ஜ வட்டாரத்தில்
பெரும் புயலை கிளப்பியது.

”மோடியை எதிர்க்க கட்சியில் எவரும் இல்லை;
மீண்டும் அவரே பிரதமர் வேட்பாளர்”
என்று பா ஜ தலைவர் அமித் மோடி
திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த சூழலில் கட்கரி மீண்டும்
பா ஜ தலைமையை வறுத்திருக்கிறார்.

Category

🗞
News

Recommended