• 6 years ago
மாண்டியா பகுதியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம்
நிர்வாகி பிரகாஷ் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

முதல்வர் குமாரசாமியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பயங்கர ஷாக் அவருக்கு. ரொம்ப வேண்டியவராச்சே.

செல்போனில் அந்த ஏரியா போலீஸ் அதிகாரியை
அழைத்த குமாரசாமி,
”ரொம்ப கவலையா இருக்கு.
பிரகாஷ் நல்ல மனுஷன்.
யார் செஞ்சிருந்தாலும் சரி,
கருணையே காட்டாம
சுட்டு தள்ளுங்க.
பிரச்சனை வந்தா நான் பார்த்துக்கிறேன்”
என்றார்.

தன் பேச்சை சேனல் கேமராக்கள்
க்ளோசப்பில் பதிவு செய்ததை
அப்போது அவர் கவனிக்கவில்லை.

Category

🗞
News

Recommended