தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள்
நடந்து வந்த நிலையில்,
வெள்ளியன்று
பிளஸ் 2 வேதியியல் கேள்வித்தாள்
சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
சனியன்று நடந்த வேதியியல் தேர்வுக்கு
லீக்கான அதே கேள்வித்தாள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் ஈசியாக பரீட்சை எழுதினர்.
அரையாண்டுத்தேர்வுகள் துவங்குவதற்கு
முந்தைய நாள் சிவகங்கை மாவட்டத்தில்
ஒரு பள்ளியில் பாதுகாப்பு பெட்டகத்தை
உடைத்து கேள்வித்தாள்கள் திருடப்பட்டன.
இவ்விரு சம்பவங்களும் தமிழக பள்ளிகளில்
தேர்வுகள் ஒப்புக்கு நடத்தப்படுகிறதோ
என்ற தோற்றத்தை அளித்துள்ளது.
கேள்வித்தாள்கள் லீக் ஆவதை தவிர்க்கும் வகையில்,
இனி ஆன்லைனில் கேள்வித்தாள்களை
பள்ளிகளுக்கு அனுப்ப கல்வித்துறை
முடிவெடுத்துள்ளது.
Category
🗞
News