கிராமத்தில் நுழைந்த 16 காட்டு யானைகள்-வீடியோ

  • 6 years ago
ஓசூர் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் பல கிராமங்கள் உள்ளன. அனுமந்தபுரம் வனப்பகுதி ஒட்டிய கிராமமாக இல்லாதநிலையிலும், 16 காட்டு யானைகள் ஓசூர் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் காலை முதல் அனுமந்தபுரம் அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள நீலகிரி தைல தோப்பில் உள்ளன. இந்த யானைகள் எந்தப்பக்கம் செல்கின்றனவோ அந்த பக்கம் விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கிராமமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தினர்.மேலும் இந்த பகுதியில் கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக யானைகளை பார்க்க வருவதால், பொதுமக்களை பார்த்து யானைகள் வெளியில் வரக்கூடும் என்பதால் 30 க்கும் மேற்பட்ட வனத்தறையினர் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்து மாலை பட்டாசுகள் வெடித்தும் சப்தம் எழுப்பியும் யானைகளை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டுள்ள திட்டமிட்டுள்ளனர்.

Des: 16 wild elephants entered the village