• 7 years ago
சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
சங்க நிதி 8 கோடியை முறைகேடு செய்ததாக
சில தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி
சென்னையில் உள்ள சங்க அலுவலகத்திற்கு
பூட்டு போட்டனர்.

பூட்டை உடைக்க விஷால்
முயன்றபோது போலீஸ் தடுத்தது.
இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடந்தது.
விஷாலை கைது செய்து திருமண
மண்டபத்தில் அடைத்தனர்.
அதன்பிறகு, பதிவாளர் முன்னிலையில்,
சங்க அலுவலகம் திறக்கப்பட்டது.
இதனிடையே,
தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த
ஏற்பாடு செய்யும்படி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம்
பாரதிராஜா தலைமையில்
தயாரிப்பாளர்கள் புகார் அளித்தனர்.
(பைட்)
பாரதிராஜா

எஸ்.எஸ்.குமரன்
செயற்குழு உறுப்பினர், தயாரிப்பாளர் சங்கம்.

விஷாலின் பதவிக்காலம் விரைவில்
முடிவடையவுள்ள நிலையில்
அடுத்து பதவியைப் பிடிப்பது யார்?
என்ற போட்டியே மோதலாக
பகிரங்கமாக வெடித்துள்ளது.

Category

🗞
News

Recommended