ரோபோடிக் அறுவை சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க கோரிக்கை- வீடியோ

  • 6 years ago


அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரோபோடிக் அறுவை சிகிச்சையை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார் வேலூர்மாவட்டம்,வேலூர் அப்போலோ மருத்துவமனையின் மையத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராகவன் மற்றும் டாக்டர் மீரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போது புகைபிடிப்பதால் சிறுநீரக புற்றுநோய் மற்றும் புற்றுநோய்கள் அதிக அளவு மக்களுக்கு ஏற்படுகிறது ஆகவே தின பராமரிப்பு அறுவை சிகிச்சை எனப்படும் ரோபோடிக் அறுவை சிகிச்சை ஒரே நாளில் செய்து நோயாளி வீடு திரும்பும் அளவில் தற்போது இதில் பிரபலமடைந்து வருகிறது இதில் இந்த நோயை குணப்படுத்த ரோபோடிக் முறையை செயல்படுத்தி வருகிறோம் இதன் மூலம் சிறுநீரக பைக்குள் ஏற்படும் பல்வேறு முறையிலான அறுவை சிகிச்சைகள் இதன் மூலம் செய்யப்படுகிறது கர்பப்பை நீக்கம் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவே இந்தியாவில் இந்த வகை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு காப்பீடு திட்டங்களில் அதற்கு அனுமதிகிடையாது எனவே தமிழக அரசும் அதே போன்று மத்திய அரசு காப்பீட்டு நிறுவனங்களும் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சையை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் அப்படி சேர்த்தால் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறினார்

Des; Robotics expert Dr Raghavan has requested the government to add robotic surgery to the insurance scheme to help the poor