தோசை கரண்டியால் அடித்து கணவன் கொலை-வீடியோ

  • 6 years ago
கள்ளக்காதல் விவகாரத்தில், தோசை கரண்டியால், கணவரை அடித்து கொலை செய்து விட்டு, போலீசில் சரணடைந்த மனைவி

கருப்பூர் அருகே, உப்புக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 40; அப்பகுதியிலுள்ள தனியார் கிரானைட் ஆலையில், கல் அறுவை செய்யும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா, 26. இவர்களுடைய இரு மகள்கள், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படிக்கின்றனர். ஐஸ்வர்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது. இதை, செல்வகுமார் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக, கடந்த, 9 ஆம் தேதி, கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் இரவு, மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஐஸ்வர்யா, தோசை கரண்டியால், செல்வகுமாரை அடித்துள்ளார். அதில், சம்பவ இடத்திலேயே, கணவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ரவிக்கு, ஐஸ்வர்யா தகவல் கொடுத்தார். இருவரும் சேர்ந்து, உடலை துணியால் சுத்தி, கல்லை கட்டி, அருகிலுள்ள கிணற்றில் வீசிவிட்டனர். அக்கம் பக்கத்தினர், செல்வகுமார் குறித்து, ஐஸ்வர்யாவிடம் விசாரித்தபோது, அவர், வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச, மக்கள் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்தனர். இதனிடையே, ஐஸ்வர்யா, கருப்பூர் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவரை, சூரமங்கலம் மகளிர் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.

Des: In the scandalous affair, the dagger spoon, the husband was beaten and killed, the surrendered wife

Recommended