கண்டசாலாவின் 96 ஆவது பிறந்த நாள் விழா- வீடியோ

  • 6 years ago
கண்டசாலாவின் 96 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் புரஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி கலா பிரதர்சினி அமைப்பு சார்பில் கண்டசாலாவின் 96 ஆவது பிறந்த நாள் விழாவில் கலைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கண்டசாலா புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருது இரண்டாவது ஆண்டாக வழங்கப்படுகிறது. இதில் கண்டசாலாவின் பிரபல பாடல்களை தேர்ந்தெடுத்து நடனம் மூலம் வடிவமைத்து கான கந்தர்வ கண்டசாலாவுக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது . விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பார்வதி கண்டசாலா, அவரது மாணவிகள், பிரபல கலைஞர்கள் வைஜயந்திமாலா பாலி, சரோஜா வைத்தியநாதன், சந்திரசேகர், ஷோபா நாயுடு, தனஞ்ஜெயன் தம்பதிகள், லீலா சாம்சன் ஆகியோரது நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பசுமை சென்னை திட்டத்தை மேம்படுத்தும் விதமாக ஆயிரம் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Des: Khandasala's 96th birthday ceremony and the program of the Puraskar Award