விவசாயிகள் விவசாயிகளுக்காக விட்டுக்கொடுத்த விவசாய நிலங்களை மீண்டும் கைப்பற்றிய சம்பவம் செந்துறை பகுதியில்யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைசேரி கிராமத்தில் நீர்வழி மற்றும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதையை அப்பகுதி விவசாயிகள் தங்களுடைய நிலத்திற்க்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாதையை விவசாயிகள் பயன்படுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் விவசாயிகளிடம் பேசி பட்டா நிலங்களை சேர்த்து மண் பாதை அமைத்தார். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் உஞ்சினி கிராமத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகம் இந்த பாதையில் லாரிகளை இயக்க முயற்சித்தது. இதனை இலங்கைச்சேரி விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர் இதனை கண்ட இலங்கைச்சேரி விவசாயிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் விவசாய பயன்பாட்டுக்காக எங்களது பட்டா நிலங்களை விட்டு கொடுத்துள்ளோம் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜோதி மற்றும் அரியலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் ஆகியோர் பார்வையிட்டு விவசாய நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, தலைமை சர்வேயர் அடங்கிய குழுவினர் இரண்டு நாட்கள் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அளவீடு செய்ததில் விவசாயிகள் பட்டா நிலம் ஒரு மீட்டருக்கு மேலாக சாலை பகுதியில் உள்ளது என்று அளவு காட்டினார்கள். உங்களது வேலிகளை இந்த அளவில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று சர்வேயர் கூறி சென்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் விட்டுக்கொடுத்த தங்களது பட்டா நிலங்களை மீண்டும் கைப்பற்றி வருவாய்த்துறையினர் கொடுத்த அளவு படி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Des: The incident that recovered agricultural lands for farmers and peasants has created a big stir in the area.
Category
🗞
News