திமுக எம்.எல்.ஏகள் கைது

  • 6 years ago
வேலூரில் அதிமுக அரசிற்கு எதிராக ஊழல் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கியதால் திமுக எம்.எல்.ஏ இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் வேலூர் பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் துணை வேந்தர் நியமனங்களில் முறைகேடு மற்றும் அதிமுக அரசில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் முறைகேடுகள் நடைபெறுகிறது என கூறி கலக்ஷன் கமிஷன் கரப்ஷன் என்ற தலைப்பில் அதிமுக அரசைக்கண்டித்து துண்டு பிரசுரங்கள் பேருந்து கடைகள் பொதுமக்களிடம் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் திரளான திமுகவினர் வழங்கினார்கள் அரசுக்கு எதிர்ப்பாகவும் அனுமதியின்றியும் ஊழல்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வெளியிட்டதால் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் மற்றும் திமுகவை சேர்ந்த 40 பேர் மீது வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர் இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் மாவட்டம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் அறிவித்துள்ள நிலையில் நோட்டீஸ் வழங்கியதால் வழக்குபதிவு செய்துள்ளதால் அச்சமடைந்துள்ள திமுகவினர் அந்தந்த பகுதிகளில் வழங்குவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

Police have filed a case against two DMK MLAs for distributing leaflets against the AIADMK government in Vellore

Recommended