சோபியாவுக்கு பாதுகாப்பு ! அமைச்சர் உறுதி

  • 6 years ago
சோபியா குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு கொடுப்பது தமிழக அரசினுடைய கடமை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார்.தூத்துக்குடியில் அதிமுக மாவட்ட கழத்தின் சார்பில் மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் .ராஜு சோபியா குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு கொடுப்பது தமிழக அரசினுடைய கடமை என்றார்.தமிழகத்துக்கு தலைகுனிவே ஏற்படுத்தியது திமுக தான் என்றார். ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என்பதால் அவர்கள் மற்றவர்களை பார்த்து சொல்ல வேண்டியதில்லை என்றார். நீதிமன்ற உத்தரவுபடி சிபிஜ சோதனை நடைபெற்று வருகிறது அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

Minister of Cinematography and Communications, Kadambur C. Raju said that the security of the Sophia family is the duty of the Tamil Nadu Government.