• 6 years ago
திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை மீண்டும் வம்பிழுத்திருக்கிறார் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.

திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மௌன ஊர்வலத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணியின் அழகிரி குறித்து பேசினார் வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம் என்று விமர்சித்தார் . வீரமணியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசிய மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் தயாநிதி கி வீரமணியை விமர்சனம் செய்துள்ளார் . சென்னை விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெரியமனிதர்கள் பெரிய மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணன் தம்பிக்கு இடையே பிரச்சனை இருந்தால் அதை பெரியமனிதனாக இருந்து சமாதனம் செய்யவேண்டும் ஆனால் கி.வீரமணி குடும்பதை பிறிக்கும் செயலில் ஈடுபாடுகிறார் அது தவறானது என்று விமர்சனம் செய்தார் . வயது வித்தியாசம் பாராமல் தயாநிதி அழகிரி திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை விமர்சனம் செய்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Dravidar Kazhagam leader Veeramani has been reintroduced by MK Arulagiri's son Dayanidhi Alagiri.

Category

🗞
News

Recommended