தலையில் தேங்காய் உடைப்பு...பரவசத்தில் பக்தர்கள்- வீடியோ

  • 6 years ago
மேட்டுமகாதானபுரத்தில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் வினோத திருவிழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீமஹாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலை குலதெய்வமாக கொண்ட இரண்டு சமூகத்தினரும் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 19ஆம் தேதி இத்திருவிழாவை நடத்துகின்றனர். இந்த திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மஹாலட்சுமி அருள்பெற்று செல்கின்றனர். ஆடி முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தலையில் தேங்காய் உடைத்து ஸ்ரீமஹாலட்சுமிக்கு நேர்த்திகடன் செலுத்தியும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது, ஆடி முதல் நாளிலிருந்து ஆடி 18 வரை விரதம் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள்,பெண்கள் கோவில் முன்பாக வரிசையாக அமர்ந்து கொண்டு தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

Des : Thousands of pilgrims from different states participated in the celebration of the ceremonial festival of coconuts on the head of the devotees at Mettumakathanathan.