• 6 years ago
டைமிங் பாஸ் டைமிங்.. இந்த செய்தியை படித்து முடித்ததும் நீங்களும் இதையே சொல்வீர்கள்.

நேற்று முன்தினம் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி கடைக்குள் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைந்தது. கடைக்காரர்களிடம் சாதாரணமாக தொடங்கிய பேச்சானது வாக்குவாதமாக மாறி, பின்பு அது கைகலப்பாக மாறி, அந்த தகராறு வீடியோ எடுக்கப்பட்டு, அது வைரலாகி... கடைசியில் பிரியாணி கடையே ரத்த வாடை அடித்தது. விசாரணையில் தாக்கியவர்கள் அனைவரும் திமுக நிர்வாகிகள் என தெரியவந்தது.

Category

🗞
News

Recommended