திருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் 400 கிலோ குட்கா பறிமுதல்- வீடியோ

  • 6 years ago
திருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குப்புசாமி பகுதியில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மொத்த விலை கடையில் அஞ்சனா ஸ்டோர்ஸ் பெட்டிகளை கொண்டு செல்லப்படுவது குறித்து சந்தேகமடைந்த போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது 400 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அந்த கடையை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரை பிடித்து விசாரித்ததில் டெல்லியில் இருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வரவழைத்து திருப்பூர் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பதை பரசுராம் ஒப்புக்கொண்டதையடுத்து போலிசார் அவரை கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த முருகேசன் என்பவரையும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த லட்சுமணன், பாபு என நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Des : Tirupur South police have been patrolling the Kuppasamy area based on the secret information received by the police that the Kudukasam unit was supplied to other parts of Kuppasamyapuram area from Tirupur.