பல்கலைக்கழக மானியக் குழு அமைப்பே தொடர வேண்டும் - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

  • 6 years ago
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் மீதான கருத்துக்களைத் தெரிவிக்க வரும் 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கும், சட்ட முன்வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கல்வியாளர்களும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கானத் திட்டம் எனவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்ட முன்வரைவு குறித்து தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி தலமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV