நேபாள் நாட்டில் கனமழை, கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 1300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பு

  • 6 years ago
இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கைலாஷ் யாத்திரைக்கு சென்றுள்ளனர். யாத்திரை முடிந்து திரும்பிய போது சிமிகோட் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக அவர்கள் அங்கிருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து சுமார் 1,300 பேர் சிக்கியுள்ளனர். சென்னையை சேர்ந்த19 பேர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியுள்ளனர். சீனா- நேபாளம் எல்லையான ஹில்சாவில் சிக்கிய தங்களை மீட்குமாறு பாதிக்கபட்ட தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சரியான உணவு, உடையின்றி தவிப்பதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக இன்னும் 5 தினங்களுக்கு அதே இடத்தில் இருக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. தங்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சிக்கியுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV