தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- தற்போது பணியில் உள்ள மாவட்ட ஆட்சியர், எஸ்.பியிடம் இன்று விசாரணை

  • 6 years ago
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகினர். அதில் 4 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன் தினம் துப்பாக்கிச் சூட்டில் பலியான தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்ற அன்று பணியில் இருந்த அதிகாரிகள், மருத்துவ கல்லூரி டீன், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது. மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் முன்னாள் தென்மண்டல IG சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரிடம், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் அடுத்த கட்டமாக தற்போது பணியில் உள்ள மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உடற்கூறு ஆய்வு, மருத்துவ உதவி செய்த மருத்துவர்களிடம் இன்று விசாரணை நடத்த உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத்தலைவர் முருகன் கூறினார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV