உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6மாதங்கள் நீட்டிப்பு மசோதாதாக்கல்

  • 6 years ago
2016 அக்டோபர் மாதம் 24-ம் தேதியுடன் உள்ளாட்சி பிரதிநிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தற்போது வரை தேர்தல் நடைபெறவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 31-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 4-வது முறையாக அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம், அதாவது டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த சட்டத்திருத்த மசோதாவை பேரவை விதிகளை தளர்த்தி இன்றே நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV