ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசுகள் முயற்சி முத்தரசன் பரபரப்பு பேட்டி

  • 6 years ago
தேசிய பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பு மேல் முறையீடு செய்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவான போக்கைத்தான் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.



ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடகோரி போராடிய பொதுமக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாயான 13 பேருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மே 22ம் தேதி துப்பாக்கி சூடு சம்பத்திற்கு பின்பு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை பிறப்பித்துள்ளது போதுமானதல்ல என்றதுடன் அரசு அமைச்சரவையை கூடி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றார். தேசிய பசுமை தீர்பாயத்தை எதிர்த்து ஆலை தரப்பில் மேல் முறையீடு செய்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றதுடன் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவான போக்கைத்தான் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதாக குற்றம்சாட்டியதுன் ஆலையை இயக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

The Sterlite Plant Party's appeal against the National Green Tribunal is only anticipated and the Central and State governments are taking a stand for the plant management, said CPM State Secretary Muthasaran.

Recommended