தாய் கண்முன்னே குழந்தைக்கு நேர்ந்த சோகம்- வீடியோ

  • 6 years ago
பாலாற்றில் மணல் கடத்திய மாட்டுவண்டியின் சக்கரத்தில் சிக்கி தாய் கண்முன்னே மாணவி துடிதுடிக்க உயிரிழந்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

வேலூர் ரெட்டிமாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் பத்மா தம்பதியினரின் 3 வது மகளான சங்கவி அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சைக்கிளில் சென்று வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த கென்னடி மற்றும் அவரது மகன் பிரதாப் ஆகிய இருவரும் பாலாற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி ஊருக்குள் வேகமாக ஒட்டி சென்றுள்ளனர் .அப்போது எதிரே சைக்கிளில் வந்த 11 வயது சிறுமி சங்கவி மீது மாட்டுவண்டி ஏற்றியதில் தடுமாறி கீழே விழுந்த சிறுமி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தாய் கண்முன்னே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார் .இதனை அறிந்த கென்னடி மற்றும் அவரது மகன் பிரதாப் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மேல்பட்டி போலீசார் மணல் கடத்தப்பட்ட மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரேதபரிசோதனைக்காக மாணவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்

Recommended