மீண்டும் அண்ணாமலை சைக்கிள்! - ஜி.கே.வாசனின் நம்பிக்கை- வீடியோ

  • 6 years ago
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துவிட்டால், அடுத்தகட்ட வாய்ப்பு ரஜினியுடன்தான்' என உறுதியாக நம்புகிறார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். ' அண்ணாமலை படத்தின் சைக்கிள் சின்னத்தை 96 தேர்தலில் பயன்படுத்தி வெற்றி கண்டோம். இந்தமுறையும் அவர் எங்களுக்குக் கை கொடுப்பார்' என நம்புகிறார் வாசன். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் காலா திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது. ' இந்தத் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்த ஜி.கே.வாசன், ' காலா படத்தை வெளியிடுவதற்கு முதல்வர் குமாரசாமி உதவ வேண்டும்' எனப் பேசினார். தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகள்கூட அமைதியாக இருக்கும் வேலையில், வாசனின் இந்தக் கருத்தை பெரிதும் ரசித்திருக்கிறார் ரஜினி. இதைப் பற்றி நம்மிடம் பேசினார் த.மா.கா மாநில நிர்வாகி ஒருவர், " ரஜினி கூட்டணியைத்தான் நாங்கள் பெரிதும் நம்புகிறோம். காங்கிரஸைவிட த.மா.கா பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது.

GK Vasan hopes that Rajinikanth will help for Tamil Maanila congress to win in election.

Category

🗞
News

Recommended