• 7 years ago
கர்நாடகா தேர்தலில் விறுவிறுவென மகிழ்ச்சியுடன் முன்னேறிக் கொண்டிருந்த பாஜகவுக்கு தற்போதைய நிலவரம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 6 இடங்கள் தேவை என்பதால் கர்நாடகாவில் அரசியல் ஆட்டங்கள் களை கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஒரு கட்டத்தில் விறுவிறுவென பாஜக முன்னேறி 120 இடங்கள் முன்னிலை என்கிற நிலை இருந்தது.

இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் பிற்பகல் நிலவரம் பாஜகவுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்து வருகிறது.

Several rounds of counting in Karnataka Assembly elections, BJP is just short of the halfway mark.

Category

🗞
News

Recommended