நிர்மலா தேவி விவகாரம் அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை- வீடியோ

  • 6 years ago
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று மதுரை பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணை வேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார். அப்போது நீதிபதிகள் கூறுகையில் நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையை முடித்து ஆளுநரிடம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Chennai Highcourt bans to release the report of Santhanam committee. He should submit the report to the Governor only.

Recommended