விசுவாசம் படத்தில் அஜித் டபுள் ஆக்க்ஷன்- வீடியோ

  • 6 years ago
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. காதலருடன் அமெரிக்கா பறந்த நயன்தாராவும் நாடு திரும்பி ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.
விஸ்வாசம் படத்தில் அஜித் கருப்பு முடியுடன் இளமையாக வருவார் என்று சிவா முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்களில் அஜித் சால்ட் லுக்கில் இருந்தது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது.
பெப்பர் லுக் என்று சொல்லிவிட்டு தலயை பழையபடி சால்ட் லுக்கில் காட்டுகிறாரே சிவா என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ரசிகர்களே வருத்தப்பட வேண்டாம். சிவா சொன்ன சொல்லை காப்பாற்றுவாராம்.
விஸ்வாசம் படத்தில் தல இரட்டை வேடத்தில் வருகிறாராம். ஒரு கதாபாத்திரம் சால்ட் லுக்கிலும் அதாங்க நரைத்த தலையாகவும், மற்றொரு கதாபாத்திரம் இளமையாகவும் இருக்குமாம்.
விவேகம் பட போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தல டபுள் ரோலோ என்று நினைத்தனர். கடைசியில் ஒரு ரோலில் தான் வந்தார். விஸ்வாசம் படத்தில் அப்படி ஏமாற்றிவிட மாட்டீர்களே சிவா?


Thala Ajith is acting in Viswasam in double action. Today music director D. Imaan has goen to viswasam shooting spot and took picture with Ajith. This new picture of Ajith with complete white hair is going viral.
Buzz is that Ajith is doing dual role in his upcoming movie Viswasam being directed by Siva.


#viswasam #ajith #doubleaction #shooting

Recommended