சிறப்பு வகுப்பால் சிக்கி தவிக்கும் மாணவர்கள்

  • 6 years ago
அரசு உத்தரவை மீறி கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் அவதிபட்டுவருகின்றனர்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20ம் தேதியுடன் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 21ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தமிழகத்தில் கோடை விடுமுறை அறிவித்த பின்பு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் வேலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளால் மாணவர்கள் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஆகவே அரசு உத்தரவை மதிக்காமல் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

des : Students are suffering from special classes in private schools in summer vacation, despite government order