டிவிட்டர் கணக்கு தொடங்கி போலீசை ஆட்டிப்படைத்த பள்ளி மாணவன்

  • 6 years ago
உத்தர பிரதேச மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் கணக்கு ஆரம்பித்து, போலீசுக்கு நிறைய கட்டளைகள் இட்டு இருக்கிறான்.

போலீஸ் எல்லோரும் எந்த விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக இந்த செயலை அவன் செய்தான் என்று கூறப்படுகிறது. இவனது கட்டளைகளை போலீஸ் சில நாட்கள் கேட்டு, அதை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தின் பேரில், இந்த கணக்கை ஆராய்ந்த சைபர் போலீஸ், இது பொய்யான கணக்கு என்று கண்டுபிடித்தது. பின் விசாரணையில் அந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஏன் இப்படி செய்தான் என்பது தெரியவந்துள்ளது.


A 10th Std School student runs a Twitter ID in the name UP DGP to order police on his complaint. Police took action on his tweets and solved his complaint. Finally police found that, it is not DGP. So they warned the school boy.