10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்-வீடியோ

  • 6 years ago
10 வருடங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது தற்போது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூடானில் இருக்கும் ''கார்ட்டோம்'' பல்கலைக்கழக மாணவர்கள், அந்த ஏரி நட்சத்திர துகள்களில் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில்தான் இந்த நட்சத்திரம் விழுந்தது. இந்த நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்ததில் இருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியே வந்துள்ளது. மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த நட்சத்திரத்திற்கு ஆல்மஹாட்டா சிட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Recommended