உண்ணாவிரதம் எடுக்க முடிவெடுத்த மோடி- வீடியோ

  • 6 years ago
நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாவது கூட்டத்தொடர் முற்றுலுமாக முடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் நாளை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்தர மோடி, அமித்ஷா, பாஜக எம்பிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 23 நாட்கள் முடங்கின. லோக்சபா, ராஜ்யசபாவின் 250 மணி நேரங்கள் வீணடைந்ததாக நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்திருந்தது. கடந்த 18 ஆண்டுகளில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மிக மோசமான கூட்டத்தொடர் இது தான் என்றும் கூறப்படுகிறது.


PM Narendra Modi will observe a day-long fast tomorrow along with BJP MPs to protest against the recent washout of the second half of the budget session of Parliament.

Category

🗞
News

Recommended