'ஹே ராம்' ரீமேக் உரிமையை வாங்கிய ஷாருக்கான்!

  • 6 years ago
உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி, நடித்த வரலாற்று அரசியல் புனைவுத் திரைப்படமான 'ஹே ராம்' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஷாருக்கான் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் இயக்கத்தில் கமல், ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமாமாலினி, அதுல் குல்கர்னி, அப்பாஸ், நாசர், நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2000-ம் ஆண்டில் ரிலீஸான படம் 'ஹேராம்'. தமிழ் மற்றும் இந்தியில் ரிலீஸான இந்தப் படத்தை கமல்ஹாசனே தயாரிக்க, இளையராஜா இசையமைத்தார்.
ஹாலிவுட்டின் பிரபலமான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் சமீபத்தில் மும்பைக்கு வந்திருந்தார். மும்பையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது கமல்ஹாசனும், ஷாருக்கானும் சந்தித்துக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, 'ஹே ராம்' படத்தின் இந்தி ரீமேக் உரிமையைத் தரும்படி ஷாருக்கான் கமலிடம் கேட்டதாகவும், கமல் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, இந்தியிலும் வெளியான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'ஹே ராம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது அதுல் குல்கர்னிக்கு கிடைத்தது. சிறந்த காஸ்ட்யூம் டிசைன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளிலும் விருது பெற்றது 'ஹே ராம்'.
'ஹே ராம்' நீளமான படம். அதிக விமர்சனங்களுக்கு உள்ளான படம். கமல் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில், அரசியல் படமான 'ஹே ராம்' இந்தியில் ரீமேக் ஆகவிருப்பதாக வந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Shahrukh Khan has acquired the Hindi remake rights of the movie 'Hey Ram', acted and directed by Kamal Haasan.

Category

🗞
News

Recommended