தேதி மாறிய அதிமுக உண்ணாவிரத போராட்டம்

  • 6 years ago
ஏப்ரல் 2 -ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல் 3 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது இந்திய நீதித்துறைக்கும் தமிழக மக்களுக்கும் செய்த துரோகம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 2 -ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இந்த உண்ணாவிரதம் ஏப்ரல் 3 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்இகாலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் கட்சியினரும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாமக சார்பில் நடைபெற்ற விவசாய சங்கத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

des : On April 2, the hunger strike on behalf of the AIADMK to set up the Cauvery Management Board has been shifted to April 3