காவிரி மேலாண்மை வாரியம்... 48 மணிநேரம் தான்..வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இன்னும் 48 மணிநேரம்தான் இருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசு இதுவரை வாய்மூடி மவுனியாகத்தான் இருப்பதை பார்த்தால் தமிழகத்துக்கு மீண்டும் பட்டை நாமத்தைத்தான் பாஜக அரசு போடும் என தெரிகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், காவிரி நதிநீரை பங்கீடுவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது.


The Supreme Court's six-week deadline set for the formation of the Cauvery Management Board is fast approaching. But the Centre did not take any action to form the CMB.