சினிமா ஸ்ட்ரைக் முடியுமா?..முடியாதா?- வீடியோ

  • 6 years ago
மார்ச் 1 ம் தேதி புதுப்பட வெளியீடுகளை நிறுத்துவதில் ஆரம்பித்த திரையுலக வேலை நிறுத்தம், கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகத் தொடர்கிறது. இந்த ஸ்ட்ரைக் எப்போதுதான் முடிவுக்கு வரும்... ? தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜிடம் பேசினோம். அவர் கூறுகையில், "2005 க்கு, பிறகு பிரிண்ட் சிஸ்டம் (படப்பெட்டி) முடிந்து டிஜிட்டல் சினிமா காலம் வந்து விட்டது. இது இங்கு மட்டும் இல்லை உலகம் முழுக்க ஏற்பட்ட மாற்றம். அதற்காக ஃபிலிம் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டு 1,70,000 பேர் வேலையிழந்தனர். இந்த சூழ்நிலையில்தான் தமிழ் நாட்டிலும் பழைய முறை மாறி டிஜட்டல் சினிமா சிஸ்டம் ஆரம்பம் ஆகியது. இதனால் தயாரிப்பாளருக்கு ஒரு பிரிண்டுக்கு, பாதி பணம் மிச்சம் ஏற்பட்டதென்பது உண்மை. அதே நேரம் தயாரிப்பாளர்கள் செலுத்தும், vpf என்று சொல்லப்படும் அந்த கட்டணம் திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜக்டருக்கும் சேர்த்து தான் என்பது அப்பொழுது தெரியாது. ஒரு புரொஜக்டர் என்பதை திரையரங்கு உரிமையாளர்தான் தான் வாங்கி வைக்க வேண்டும். இதுதான் சட்டம், அந்த திரையரங்கிற்கு தான் அரசு லைசென்ஸ் வழங்கும், வருடா வரும் புதுப்பிக்கப்படும். இப்படி இருக்க புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் அந்த vpf எனப்படும் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் சரி, மாற்றத்தை ஏற்றுக் கொண்டு கட்டணம்,செலுத்துவது நியாமானது, ஏற்றுக் கொள்ளலாம். அதே சமயம் எத்தனை வருடம் இப்படிக் கட்டமுடியும்.... இதுதான் கேள்வி?

Producers Council Secretary Durairaj has explained why the cinema strike is still going on.