சர்வாதிகாரி என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஹிட்லர் மட்டும் தான் நினைவுக்கு வருவார். மக்களிடையே விரோத போக்கினை கடைபிடித்து மிக கொடூரமான முறையில் நடந்த கொண்டதாக வரலாற்றினை படித்திருப்போம். அன்றைக்கு என்றில்லை என்றைக்குமே சர்வாதிகார போக்கு கடைபிடிப்பவர்களை மக்கள் வெறுக்கத்தான் செய்தார்கள். சில காலங்கள் அவர்களுக்கு அடிமையாக அவரது குரலுக்கு பயந்து கொண்டு அஞ்சி நடுங்குவதாய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரையே கொல்லும் அளவிற்கு மக்களின் எழுச்சி இருந்தது. மக்களை கட்டுப்பாடுடன் வைத்திருக்கிறார், அண்டை நாடுகளிடமிருந்து பாதுகாக்கிறார் என்று எத்தனையோ காரணங்களை வரிசைபடுத்தினாலும் சர்வாதிகாரம் என்பது எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
Category
🗞
News