மது சரி இல்லையென்றால் இனி கட்டணமில்லா எண்ணில் புகார் கொடுங்கள்- வீடியோ

  • 6 years ago

மது, சைடிஷ், பார்கள் தொடர்பான புகார்களை அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகில் பல இடங்களில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருவதாகவும், அதன்மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் 2500 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டத்தில் ரெய்டு நடத்தி வருகின்றனர். அப்போது, டாஸ்மாக் கடைகளின் அருகே சில்லறை கடைகள் வைத்து மது விற்பனை நடப்பது குறித்த புகாரின்பேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


Toll free number given to handle the complaints regarding TASMAC bars, liquors and side dish provided by them.