விஜய் 62 இன்ட்ரோ சாங் பாடும் விபின் அனேஜா- வீடியோ

  • 6 years ago
நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸட்ரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிடத் திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட வைத்து பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் இந்தி பாடல்களை பாடி வரும் விபின் அனேஜா, இதுவரை தமிழ்ப் பாடல்களை பாடியதில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா. 'மெர்சல்' படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கை விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தப் பாடலைப் பாடிய கைலாஷ் கெர் உள்ளிட்டோர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். அதைப் போலவே, 'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார் பாடகர் விபின் அனேஜா.

'Sun Pictures' producing the film 'Vijay 62' directed by AR Murugadoss. 'Vijay 62' intro song will be sung by a popular bollywood singer Vipin Aneja.