பெங்களூரு பள்ளி ஒன்றில் எல்கேஜிக்கு ரூ.2 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

  • 6 years ago
எல்.கே.ஜி படிப்பிற்கு பெங்களூரிலுள்ள முன்னணி பள்ளியொன்று ரூ.2லட்சம் கட்டணமாக வாங்குவதாக குறிப்பிட்டுள்ள கையேடு ஒன்றின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. பெங்களூர் எம்.ஜி.ரோடு அருகேயுள்ள செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ளது பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி. இப்பள்ளியின் 2017-18ம் கல்வி ஆண்டுக்கான, கட்டண கையேடுதான் இப்படி வைரலாகியுள்ளது.

ட்யூசன் ஃபீஸ் என ரூ.39,830 வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் ரூ.62,500 வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Bishop Cotton Boys' School, Bangalore, Fee structure for the Year 2017-18 (LKG) is goes viral.

Recommended