துல்கர், ஸ்ருதி போட்ட குத்தாட்டம்!-வீடியோ

  • 6 years ago
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கென ஒரு தனி இடம் இருக்கிறது. அஜித்தின் பாடல்களை எந்தப் படத்தில் பயன்படுத்தி இருந்தாலும், அதற்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும். சமீபத்தில் கேரளாவில் 2018-ம் ஆண்டுக்கான வனிதா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி மலையாள நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் விருது பெற்ற துல்கர் சல்மானோடு, விருது வழங்கிய ஸ்ருதி இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு செமையாக டான்ஸ் ஆடினார். சமீபத்தில் கேரளாவில் வனிதா விருதுகள் 2018 நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாப்புலர் ஹீரோ என்ற பிரிவில் நடிகர் துல்கர் சல்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துல்கருக்கு விருதை வழங்கினார். அஜித் பாடலுக்கு துல்கரும், ஸ்ருதியும் சிறப்பாக ஆடியதால் பார்வையாளர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இவர்கள் ஆடிய வீடியோ யூ-ட்யூபிலும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Recently, Vanitha Awards 2018 function held at Kerala. Leading Malayalam stars were present at this function. At the function, Dulquer salmaan danced with Shruti for 'Aaluma doluma' song.

Recommended