உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு திரில்லர் படம்- வீடியோ

  • 6 years ago
காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான '6 அத்தியாயம்' படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான 'சித்திரம் கொல்லுதடி' அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள ஸ்ரீதரின் இரண்டாம் படம்தான் 'என் பெயர் ஆனந்தன்'.

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'தாயம்' ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 'ஏமாலி', 'காதல் கண் கட்டுதே' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள்.


Yen Peyar Anandan is a new thriller movie from one of the makers of 6 Athiyayam.