பயணத்தை துவங்கிய கமல்.. தடை விதித்த அரசு..!!

  • 6 years ago
அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த பள்ளிக் கூடத்துக்கு சென்று மாணவர்களை சந்திக்க அரசு தடை விதித்தது. இதனால் கலாம் படித்த பள்ளியை கமல்ஹாசன் பார்வையிடவில்லை. கமல்ஹாசன் அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று காலை தொடங்கினார். இதையடுத்து மண்டபத்தில் உள்ள அப்துல் கலாம் படித்த பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்துல்கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல்ஹாசனை, கலாமின் பேரன சலீம் வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார். நடிகர் கமல்ஹாசன் கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார்.