வித்யா பாலன் வேடத்தில் ஜோதிகா!

  • 6 years ago
சமீபத்தில் பாலா இயக்கி வெளிவந்த 'நாச்சியார்' படம் மூலம் கொண்டாடப்படுகிறார் ஜோதிகா. இப்படத்தில் ஜோதிகா போலீஸாக நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு ஆகியோருடன் ஜோதிகா இணைகிறார். இந்நிலையில், பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்த 'தும்ஹரி சுலு' படத்தின் ரீமேக்கில் வித்யா பாலனின் வேடத்தில் நடிக்க இருக்கிறாராம் ஜோதிகா. இதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் சாதனை செய்த 'தும்ஹரி சுலு' படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. நடிகை வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறாராம். ஒரு குடும்பப்பெண் ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகி எப்படி கலக்குகிறார் என்பது கதையாம். அந்தக் கதாபாத்திரத்தில் தான் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தை ராதாமோகன் இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ராதாமோகனின் 'மொழி' படத்தில் வாய்பேச இயலாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார் ஜோதிகா.


Jyothika has recently been celebrated by Bala's 'Naachiyaar'. Jyotika committed to act in Maniratnam's 'Chekka Chivantha vaanam'. In this case, Jyothika is to play in the remake of Vidya Balan's 'Tumhari Sulu'.