பட்ஜெட் 2018-19, புதிதாக சேரும் ஊழியர்களின் பி.எப்-புக்கு அரசின் பங்களிப்பு 12% - வீடியோ

  • 6 years ago
புதிய ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அரசின் பங்களிப்பாக 12சதவீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெண்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் ஈபிஎஃப் தொகையானது 12 சதவீதத்தில் அல்லது 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுவதாக அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் சுய சார்பாகவே வாழ நம்பிக்கை அளித்தது ஒய்வூதியம். பணிஓய்வுக்கு பின்னர் கவுரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தரவாதம் அளித்தது. அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் தனது வாழ்வில் முதுமை காலத்தில் பொருளாதார ரீதியான பாதிப்புகளிலிருந்து மீளவும், வறுமையை எதிர்த்து போராடவும் வழங்கப்படுவதுதான் ஓய்வூதியம்.1995-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசே அளித்து வந்தது. ஓய்வுக்கு முன்னரான ஐந்து ஆண்டு சம்பள சராசரி அடிப்படையில் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. பின்னர் பணியாளரின் ஓய்வூதியத்தை பணியாளர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டமாக மத்திய அரசு மாற்றியமைத்தது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய சட்டத் திருத்தத்தின்படி பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து 1999,2004 எல பல்வேறு கட்டங்களாக புதிய ஓய்வூதிய திட்ட பலன்களை அளிப்பதில் பல நடைமுறைகளை அரசு கொண்டு வந்தது.



Government will now contribute 12 per cent of employee provident fund (EPF) to the new employees in all sections for the first 3 years and women Contribution has been reduced to 8 percentage and this will benefit them to take higher home pay.

Category

🗞
News

Recommended