விரைவில் திரைத்துறைக்கு வரவிருக்கும் விஜய் வாரிசு. ஆனால்..!!

  • 6 years ago
விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமான இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். விஜய்க்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பது அனைவரும் அறிந்ததுதான். 'வேட்டைக்காரன்' படத்தில் மகனையும், 'தெறி' படத்தில் மகளையும் தளபதி திரையில் காட்டினார். விஜய்யின் மகள் திவ்யா சாஷா விஜய்யைப் போலவே செமையாக பாடுவாராம். ஆக, பாடகியாக அவரது குரலைக் கேட்கும் காலம் தொலைவில் இல்லை.

சிறு வயதில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்ன வயது விஜயகாந்த் ஆகவும் நடித்திருக்கிறார் விஜய். சிறுவயதில் சினிமாவில் பாடலையும் பாடியிருக்கிறார் விஜய். 'நாளையதீர்ப்பு' படத்தின் மூலம் ஹீரோவானவர் இப்போது 62-வது படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தனது மகன், மகள் இருவ‌ரின் புகைப்படங்களும் பத்தி‌ரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர். தனது குழந்தைகளின் புகைப்படமே பத்தி‌ரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர் என்பதால் சினிமாவில் இப்போதே நடிக்க வைக்கமாட்டார் என பலரும் எதிர்பார்த்தனர்.


Vijay has a son and a daughter. Vijay's daughter Divya Saasha is currently studying sixth grade. She sings many songs very well. So it seems that soon she will sing in cinema.