எல்லா பக்கமும் ஓட்டுக்காக கைகோர்க்கும் பா.ஜ.க- வீடியோ

  • 6 years ago
பாஜக எப்போதும் கிறிஸ்தவ மிஷனரிகள், பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், முஸ்லிம்களை வசைபாடுவது வழக்கம். ஆனால் ஓட்டு அரசியல் என்று வரும்போது கூச்ச நாச்சமே இல்லாமல் இதே சக்திகளுடன் கை கோர்த்துக் கொள்கிறது பாஜக. மதச்சார்பின்மை என்பது போலியானது; கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிரிவினைவாதிகளை மென்மையாக அணுகும் தன்மை கொண்டது என்பதுதான் பாஜகவின் விமர்சனம். தமிழகத்திலும் திராவிடம்- ஆரியம் என்பதே கிறிஸ்தவ மிஷனரிகளின் கருத்து என இடைவிடாது விமர்சிக்கிறது பாஜக.

தற்போது மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் பாஜக யாருடனெல்லாம் கூட்டணி வைத்திருக்கிறது பாருங்கள். பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி Indigenous People's Front of Tripura (IPFT). திரிபுராவில் பழங்குடி இனமக்களை உள்ளடக்கி தனி மாநிலம் கோருகிற வலிமையான அமைப்பு இது. அண்மையில் தனிமாநிலம் கோரி உக்கிரமான போராட்டங்களை நடத்தி இயல்பு வாழ்க்கையை நாசமாக்கியது இந்த அமைப்பு.

கிறிஸ்தவ மிஷனரிகளே கூடாது என விமர்சிக்கும் பாஜக மேகாலயாவிலும் நாகாலாந்திலும் அந்த மிஷனரிகளால்தான் காலூன்றிக் கொண்டிருக்கிறது. மேகாலயாவில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மை. இதனால் தேவாலயங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுலா மேம்பாட்டின் கீழ் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்தது மத்திய பாஜக அரசு. அதுவும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்... கிறிஸ்தவ மிஷனரிகளின் தயவு இல்லாமல் மேகாலயாவில் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தே இந்த அறிவிப்பை வெளியிட்டது பாஜக.

BJP now join hands with Christians and Muslims for Vote.