மாநில அரசுகள் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை.. இந்த முழக்கங்களின் பின்னணி என்ன?

  • 6 years ago
பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கட்சிகள் திடீர் என விலகுவது, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என முழக்கங்கள் எழுவதன் பின்னணியில் பெரிய நாடகம் இருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. பாஜகவுடன் கால் நூற்றாண்டு காலமாக கூட்டணியில் இருந்து வந்தது சிவசேனா. அவ்வப்போது பாஜகவை விமர்சித்தாலும் மத்திய அமைச்சரவையில் நீடித்து கொண்டுதான் இருக்கிறது சிவசேனா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக சிவசேனா அறிவித்தது. லோக்சபா தேர்தலிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் எனவும் சிவசேனா அறிவித்தது.

இதையடுத்து தெலுங்குதேசம் கட்சியும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதேபோல் திடீரென திமுகவும் பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என முழங்கத் தொடங்கியுள்ளது.

இந்த கட்சிகள் அனைத்துமே பாஜகவிடம் இருந்து தற்போதே தங்களை அன்னியப்படுத்துவதாக அறிவிப்பதே நாடகமாகத்தான் தெரிகிறது. இப்படி அறிவிப்பதன் மூலம் இந்த கட்சிகளுக்கு வரும் லோக்சபா தேர்தல்களில் நிச்சயம் ஆதாயம் கிடைக்கும்.


TDP will contest 2019 Lok Sabha election and Maharashtra assembly election alone.