Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/27/2018
அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.
அரசியல் பணிகளில் உழைக்க வாய்ப்பு கொடுங்கள். அரசியல் பார்த்து தான் வளர்ந்தேன், சினிமாவிற்கு வந்ததால் அரசியலில் ஒதுங்க இருந்தேன். அரசியலுக்க வர எனக்கும் ஆர்வம் இருக்கறிது என்று உதயநிதி கூறி இருந்தார். கட்சி வேலை முதலில் செய்கிறேன் வாய்ப்பு கொடுங்கள் என்றும் உதயநிதி கூறி இருந்தார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன.


Udhayanidhi Stalin participated in DMK protest against bus fare hike, after his political entry announcement first time he participated in protest

Category

🗞
News

Recommended