எம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு- வீடியோ

  • 6 years ago
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை ஹைகோர்ட்.

தினகரனுக்கு ஆதரவாக திரண்டு, எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து, ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் பதவி பறிப்புக்கு ஆளான எம்எல்ஏக்கள். இந்த வழக்கில், சபாநாயகர் தரப்பு மற்றும் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பின் வாத பிரதிவாதங்கள் நிறைவடைந்தன.இந்த நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. அனைத்து தரப்பினரும் ஏற்கனவே எழுத்துப்பூர்வ வாதங்களையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்றால், திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.





Madras HC reserves its verdict on cases filed against disqualification of 18 TN MLAs who supporting TTV Dinakaran.