News Wallet | 22-1-18 | காலை செய்திகள்- வீடியோ

  • 7 years ago
1) அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலாகியுள்ளது.



2)25 நாட்களாக நடந்த பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்: திங்கள் முதல் இயங்கும்அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, 25 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். வரும் திங்கள் முதல் பட்டாசு ஆலைகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

3)அரசியல் பயணத்திற்கு முன்னோட்டமாக நான்கு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் நடிகர் கமல்.

4)வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


5)அம்மா இரு சக்கர வாகனத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.ஆதார் கார்டு ஓட்டுனர் உரிமம்.


6)மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இருக்காது; அரசிடம் இருந்து மக்கள் சலுகைகளையும், இலவசங்களையும் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதுபோன்ற பொய்யான தோற்றம் உருவாக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Recommended