முதன் முறையாக ரஜினி ரசிகர் மன்ற கூட்டம்

  • 6 years ago
ரஜினி ரசிகர் மன்றத்தின் முதல் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

வேலூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தில் ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நிர்வாகிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் போன்று விவாதிக்கப்பட்டது. மேலும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்களை உறுப்பினராக சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்டத்தில் குறைந்த பட்சம் 7 லட்சம் உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் சுதாகர் நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தார்.

Des : The first consultation meeting of the Rajni fan club was led by coordinator Sudhakar. The consultation was held on the way the fan club executives were involved and the membership was admitted.

Recommended