நடிகர்களின் மாய வலையில் இருந்து தமிழகத்திற்கு என்று விடுதலை ?

  • 6 years ago
கண்ணுக்கு எட்டியவரை பச்சை பசேல் என வயல்கள் என்று முன்பு கூறுவோம்.. ஆனால் இன்று வயல்களை அழித்து விட்டோம். கண்ணுக்கு எட்டியவரை கான்க்ரீட் காடுகள்தான் காட்சி தருகின்றன. அடுத்து சினிமாக்காரர்களின் படையெடுப்பு. ஆனால் இந்த சினிமாக்காரர்களின் படையெடுப்பு தமிழ்நாட்டுக்குப் புதிதில்லைதான். ஆண்டாண்டு காலமாக இந்த சினிமாவுக்குத்தானே அடிமைப்பட்டுக் கிடக்கிறது தமிழகம். மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்க விரும்பாவிட்டாலும் கூட வலியக்க திணித்து விடுகிறது சூழல்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்த சினிமா, 'சுழல்' போல மக்களை உள்ளிழுத்து கபளீகரம் செய்து கொண்டுதான் உள்ளது.

அரசியலையும், இந்த சினிமாவையும் பிரிக்க முடியவில்லை. இதிலிருந்து மக்களால் விடுபடவும் முடியவில்லை. தலையில் எழுதியிருப்பது என்று 'ஜஸ்ட் லைக் தட்' சொல்லி விட்டுப் போக முடியாது என்றாலும் கூட இதிலிருந்து எப்போது விமோச்சனம் என்றுதான் நமக்குப் புரியவில்லை.

மாற்று அரசியல் எப்போது நமக்கு வரும், மாற்று என்பது எப்போது கிடைக்கும் என்பதே தமிழக மக்களுக்குப் புரியாமல் உள்ளது. எது மாற்று என்பதிலும் மக்களுக்குப் பெரும் குழப்பம்.

It seems, Tamil Nadu is going to the clutches of the Cinema stars once again as Rajini and Kamal are getting ready to make a big inroads in the Politics soon.

Recommended